ஈரோடு:கேர்மாளம் சாலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிச் சென்ற லாரியை யானைகள் வழிமறித்ததால், வாக்குப்பதிவு இயந்திரங்கள், அலுவலர்களுடன் அந்த லாரி 2 மணி நேரம் வரை காத்திருக்க நேர்ந்தது.
தேர்தல் வாகனத்தை 'ப்ளாக்' செய்த பலே யானைகள்! - கேர்மாளம் சாலை
ஈரோடு கேர்மாளம் சாலையில் வாக்குப்பதிவு இயந்திங்களை கொண்டு சென்ற லாரியை யானைகள் வழிமறித்தன. இதனால் 2 மணி நேரம் வரை வாக்கு இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்களுடன் லாரி காத்திருக்க நேர்ந்தது.
கேர்மாளம், கோட்டாடை, கோட்டாளம் ஆகிய அடர்ந்த காட்டுப்பகுதியான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்து கட்சி முகவர்கள் முன்னிலைியல் சீல் வைக்து அனுப்பும் பணி நள்ளிரவு வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்வதற்கான நடைமுறைகள் நடந்த பின்னர் நள்ளிரவில் வாக்குப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
கேர்மாளம் ஆசனூர் சாலையில் லாரி சென்றபோது சாலையின் குறுக்கே இரு யானைகள் நின்று கொண்டிருந்தன. யானை காட்டுக்குள் புகுந்துவிடும் என எதிர்ப்பார்த்து காத்திருந்த, அலுவலர்கள் வாக்குப்பெட்டிகளைக் கொண்டு செல்ல முடியாமல் திணறினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின் யானைகள் காட்டுக்குள் சென்ற பின்னர் லாரி புறப்பட்டு கோபிசெட்டிபாளையம் வாக்கு எண்ணும் மையத்தை வந்தடைந்தது.