தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலையில் அட்டகாசம் செய்த ஒற்றை யானை! - elephant atrocity on road

ஈரோடு: ஆசனூர் சாலையில் அட்டகாசம் செய்த ஒற்றை யானையால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

elephant atrocity on road

By

Published : Oct 3, 2019, 11:12 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக சாலையின் நடுவே செல்லும் மைசூர் தேசியநெடுஞ்சாலையில் அடிக்கடி யானைகள் சாலையை கடப்பது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் ஆசனூர் காராப்பள்ளம் சாலையின் நடுவே ஒற்றை யானை நின்றுகொண்டு அட்டகாசம் செய்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து யானை காட்டுக்குள் சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கமல்ஹாசனால் விக்ரம் பட வாய்ப்பை இழக்கும் நாயகி?

ABOUT THE AUTHOR

...view details