தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின்சார சட்டத்திருத்த மசோதா: விவசாயிகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! - ஈரோடு மாவட்டம் சென்னிமலை

ஈரோடு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்டத் திருத்தத்தால் விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்தாகும் என்று கூறி, இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என ஈரோடு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து விவசாயிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து விவசாயிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 27, 2020, 9:47 PM IST

மத்திய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இது விவசாயிகளைப் பாதிக்கும் சட்டம் எனவும்; இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மேலும் மின்சாரத்தை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும்; மத்திய - மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் கூறி, ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.சி. ரத்தினசாமி தலைமையில், ஈரோடு மாவட்ட இலவச மின் உரிமை பாதுகாப்பு கூட்டியக்க சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையன் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், மாவட்டத்தின் பிறப்பகுதிகளான மொடக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமாரசாமி, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை தலைவர் காசியண்ணன், செயலாளர் வடிவேல், கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் சுப்பு உள்பட பலர் தலைமையில், 100க்கும் மேற்ப்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மின்சார சட்டத் திருத்தம் கொண்டு வருவதால், விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்தாகும் எனவும்; விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனவும்;

மேலும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் செய்துள்ள அவசர திருத்தங்கள், ஒழுங்கு முறை விற்பனைக் கூட சட்டத்தில் செய்துள்ள திருத்தச் சட்டங்கள், மின்சார சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details