தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்: செங்கோட்டையன் - sengottayan about neet election campaign

ஈரோடு: நீட் தேர்வில் பிற மாநிலங்களில் கடைபிடிக்கும் முறையை தமிழ்நாட்டிலும் கடைபிடிக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

education minister sengottayan  sengottayan about neet election campaign  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

By

Published : Dec 26, 2019, 10:25 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பவானிசாகர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், நீட்தேர்வு மையத்திற்கு செல்லும் மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்துவதில், மற்ற மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் முறையையே பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளிக் குழந்தைகளுக்கு தண்ணீர் அருந்த வழி வகை செய்துள்ள தருணத்தில் நொறுக்குத்தீனி வழங்க சாத்தியக் கூறுகள் இல்லை. அரசு பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கிவரும் தனியார் தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்றார்.

இப்போவே இந்த ஆட்டோ வீட்டுக்கு குடிபோகனும் போலயே!

மேலும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் ஆடிட்டர் தேர்வுக்கானப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவிலிபாளையம் ஏரியை அரசு சார்பில் தூர் வாரப்பட்டு சுற்றுலாதலமாக மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details