ஈரோடு: அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, பள்ளி திறப்பு குறித்து கருத்துகளை மாணவர்களின் பெற்றோர் வசதிக்காக பதிவுசெய்யலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம், சின்னநாயக்கன்புதூர், வெள்ளாங்கோயில் ஆகியப் பகுதிகளில் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திலுள்ள 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு, 2020ஆம் ஆண்டிற்கான தீபாவளி ஊக்கத்தொகையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 'தனியார் பள்ளிகளிலிருந்து அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் வரவில்லை. அதுபோல ஏதேனும் புகார்கள் வந்தால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி மாணவர்களின் நிலையைக் கருத்திற்கொண்டு, அவர்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் சென்று பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
தற்போது, மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். தொழிற்கல்விகள் பாடத்திட்டத்தில் விரைவில் சேர்க்கப்படும். கூடுதலாக, மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று கூறினார்.