ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூரில் பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், தக்காளி போன்றவைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது மிளகாய் சாகுபடியிலும் அங்குள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரேப்பாளையம் வனத்தையொட்டி உள்ள பகுதியில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.
காய்ந்த மிளகாய் கிலோ ரூ.280 - விவசாயிகள் ஹாப்பி - வாடிக்கையாளர்கள் விரக்தி - பச்சை மிளகாய் விலை
பச்சை மிளகாய் விலை குறைந்துள்ள நிலையில், காய்ந்த மிளகாய் கிலோ ரூ.280க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர் நன்கு வளர்ந்து கொத்து கொத்தாக காய்ந்துள்ளன. 6 மாத பயிரான மிளகாய், 4 மாதத்தில் காய்பிடிக்க தொடங்கிவிடும். தற்போது, பச்சை மிளகாய் கிலோ ரூ.30 ஆக விற்பனையாகிறது. கடந்த மாதம் காய்ந்த மிளகாய் விலை கிலோ ரூ.180 ஆக இருந்தது. தற்போது கிலோ ரூ.280 ஆக உயர்ந்துள்ளதால் இயற்கையாக செடியிலேயே பழுக்க வைத்து மிளகாய் அறுவடை செய்கின்றனர்.
இதற்கிடையே தற்போது மழை நீங்கி வெயில் அடிப்பதால் பழுத்த மிளகாய் பறித்து 10 நாள்கள் வெயிலில் உலர வைத்து விற்பனைக்கு தயார் செய்து வருகின்றனர். இதனால், வியாபாரிகள் முன்பணம் கொடுத்து கொள்முதல் செய்வதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பச்சை மிளகாய் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை