தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திக தலைவர் வீரமணி கூட்டத்தில் பாஜக ரகளை: போலீசார் விசராணை - ஈரோட்டில் திமுக பாஜக இடையே தகராறு

ஈரோடு: திக தலைவர் வீரமணியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பாஜகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட ரகளையால் கடும் மோதல் ஏற்பட்டது.

திக தலைவர் வீரமணி கூட்டத்தில் பாஜக ரகளை: போலீசார்  விசராணை
திக தலைவர் வீரமணி கூட்டத்தில் பாஜக ரகளை: போலீசார் விசராணை

By

Published : Mar 26, 2021, 4:33 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் செங்கோட்டையனும், திமுக சார்பில் மணிமாறனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் திமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து நம்பியூரில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது கூட்டத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது.

கூட்டத்தின் ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்த பாஜக நிர்வாகிகளிடம் அதை திமுக ஆதரவாளர்கள் விநியோகித்துள்ளனர். இதனால் பாஜக, திமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பில் முடிந்தது.

இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் தூண்டுதலிலன்பேரில் பரப்புரை கூட்டத்தில் பாஜக ரகளையில் ஈடுபட்டதாகவும் அவர்களை கைது செய்ய் வேண்டும் எனவும் திகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்ட பாஜகவினரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details