ஈரோடுமாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் ஆணழகன் போட்டி இன்று (ஆக.1) நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம், கோபி, பவானி, ஈரோடு, பெருந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஆணழகன் போட்டிக்கு வந்திருந்தனர்.
இதில் பல்வேறு பிரிவுகளில் காவிலிபாளையத்தைச் சேர்ந்த சாம்பியன் ஜிம் நடத்தி வரும் மணிகண்டன் என்கிற தினேஷ்குமார் 'மிஸ்டர் ஈரோடு' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது.