தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புகைபிடிக்கக் கூடாது: வாழைப்பழம் சாப்பிடுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை! - புகைபிடிக்கக்கூடாது டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

ஈரோடு மாவட்டம் சின்னட்டிபாளையம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் பொதுமக்களிடம் புகைபிடிக்கக் கூடாது எனக் கூறிய டிஜிபி சைலேந்திரபாபு வாழைப்பழம் சாப்பிடுமாறு அறிவுறுத்தினார்.

வாழைப்பழம் சாப்பிடுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை
வாழைப்பழம் சாப்பிடுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

By

Published : Apr 2, 2022, 12:19 PM IST

ஈரோடு: நாடு முழுவதும் ஐஎப்எஸ் தேர்வில் தேர்வாகியுள்ள வன அதிகாரிகளுக்கு வனம் சார்ந்த முதற்கட்ட பயிற்சி சத்தியமங்கலம் அடுத்த புதுகுய்யனூரில் தொடங்கியது. இப்பயிற்சியினை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று (ஏப்ரல் 1) தொடங்கி வைத்தார். இந்தப் பயிற்சியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் கலந்துகொண்டனர்.

அதிரடிப்படையினர் இவர்களுக்கு சத்தியமங்கலம், திம்பம், தலமலை, கேர்மாளம் ஆகிய பகுதிகளில் மோப்ப நாய்களுடன் சமூக விரோதிகள் தேடுதல் வேட்டை பயிற்சியினை அளித்தனர். அதனைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு இன்று (ஏப்ரல் 2) காலை சின்னட்டிபாளையம் கிராமத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது ஒரு டீக்கடையில் பொதுமக்களிடம் புகைபிடிக்கக் கூடாது எனக் கூறிய டிஜிபி சைலேந்திரபாபு வாழைப்பழம் சாப்பிடுமாறு அறிவுறுத்தினார்.மேலும் வாழைப்பழம் இயற்கையாக பழுத்து உள்ளதாகவும் சென்னையில் ஒரு நாள் கூட வாழைப்பழம் சாப்பிட்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வாழைப்பழம் சாப்பிடுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

இதையும் படிங்க:நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்!

ABOUT THE AUTHOR

...view details