ஈரோடு:மத்திய அரசு வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதிமுதல் கைத்தறி, நெசவு மூலம் உற்பத்தி செய்யப்படும். போர்வை, பட்டு உற்பத்திகளுக்கு ஐந்து, 12 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை உயர்த்தி உள்ளது.
இதை முழுவதும் ரத்துசெய்திட வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தினர் இன்று வீரப்பன் சத்திரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரியை ரத்து செய்யாவிடில், ஏற்கனவே நுகர்வோர்கள் கைத்தறி நெசவின் மூலம் உற்பத்தி செய்யப்படும், துணிகள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.