ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகை, முல்லை, கோழிக்கொண்டை, செண்டுமல்லி உள்ளிட்டப் பல்வேறு ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
சுமார் 25ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ரூ.2ஆயிரம் வரை விற்கப்பட்ட மல்லிகை
சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகைப்பூ பிரதானத் தொழிலாக இருப்பதால், தினந்தோறும் சத்தியமங்கலம் மலர்ச்சந்தையில் 10 டன் பூக்கள் விற்பனையாகின்றன. கடந்த மாதம் கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட மல்லிகை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கிலோ ரூ.2 ஆயிரம் வரை ஏலம் போனது.