ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலாக அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இம்மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 129 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையான கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 888 நபர்கள் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
துணை ஆணையருக்கு கரோனா - மாநகராட்சி அலுவலகம் மூடல்! - Erode district
ஈரோடு: மாநகராட்சி துணை ஆணையர், பி.எஸ்.என்.எல் அலுவலர் என அரசு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையரும், முதன்மை செயற்பொறியாளருமான விஜயகுமார் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது அலுவலகம் மூடப்பட்டு பொதுமக்கள் புதிய மாநகராட்சிக் கட்டட அலுவலகத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கும் நோய் அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக மாநகராட்சி புதிய அலுவலகம் மூடப்பட்டு அலுவலர்கள், ஊழியர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 8) முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஈரோடு மீனாட்சி சுந்தரனார் வீதியில் செயல்பட்டுவரும் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அலுவலர் ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது அலுவலக அறை மூடப்பட்டதுடன், வாடிக்கையாளர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.