தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோபியில் கரோனா பேரிடர் உதவி மையம் தொடக்கம்

ஈரோடு: கோபிச்செட்டிபாளையத்தில் கரோனா பேரிடர் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

By

Published : Jun 4, 2021, 2:46 AM IST

கோபிசெட்டிபாளையத்தில் கொரானா பேரிடர் உதவி மையம்
கோபிசெட்டிபாளையத்தில் கொரானா பேரிடர் உதவி மையம்

ஈரோடு கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள மின்நகரில் சிஎஸ்ஐ கிருஸ்துநாதர் ஆலயம் மற்றும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா இணைந்து கரோனா பேரிடர் மையம் ஒன்றை தொடங்கியுள்ளன.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கரோனா முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது படுக்கை வசதி கிடைக்காமலும், ஆக்சிஜன் கிடைக்காமலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதனை கருத்தில் கொண்டு சிஎஸ்ஐ கிருஸ்துநாதர் ஆலயம் மற்றும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கான பேரிடர் உதவி மையத்தை கோபிச்செட்டிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இம்மையத்தின் மூலம் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்ட நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுபவர்களுக்கான ஆக்ஸிஜன் வசதியுடைய நடமாடும் ஆம்புலன்ஸ், கரோனா விழிப்புணர்வு, மருத்துவமனைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய முடிவுசெய்துள்ளனர்.

இந்தச் சேவையை தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இந்த அமைப்பு சார்பில் தொடரும் எனவும், அதற்காக கோபிச்செட்டி பாளையத்தில் உதவி வேண்டுவோர் 73393 74838,93423 74838 என்ற எண்ணில் தொடர்புகொண்டு உதவிக்கு அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details