தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோட்டில் அடுத்தடுத்து சாலை விபத்து: 5 பேர் உயிரிழப்பு! - 5 killed in erode road accident

ஈரோட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்தில், பெண் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

By

Published : Nov 24, 2020, 7:39 PM IST

ஈரோடு-கரூர் சாலை கொடுமுடி ஒத்தக்கடை அருகே கார் விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக, அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், "உயிரிழந்த 4 பேரும் பெருந்துறை அடுத்துள்ள வீராணம்பாளையத்தை சேர்ந்த தாமோதரன், அவரது தம்பி கிருஷ்ணசாமி, உறவினர்கள் ரகுநாதன் முருகசாமி ஆகியோர் என்பதும், அவர்கள் கரூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, கார் கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டதும்" தெரிவந்தது.

இதேபோல், கொடுமுடி அரசு நியாய விலைக்கடையில் பணியாற்றி வந்த கற்பகம் எனும் பெண், கொடுமுடி கணபதிபாளையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மோதி உயிரிழிந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சாலை விபத்து இளைஞர் உயிரிழப்பு: இரண்டு பெண்கள் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details