தமிழ்நாடு

tamil nadu

உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு 2ஆவது நாளாக தொடர் சிகிச்சை

By

Published : Jul 7, 2022, 11:47 AM IST

வயது முதிர்ச்சியால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் காலநடை மருத்துவர்கள் மூலம் 2 ஆவது நாளாக தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

தொடர் சிகிச்சை
தொடர் சிகிச்சை

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பாளையம் கிராமத்தில் வயது முதிர்ந்த பெண் யானை ஒன்று எழ முடியாமல் படுத்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் யானை நடக்க முடியாமல் உடல் நலம் குன்றிய நிலையில் படுத்து கிடப்பதைக் கண்டு உடனடியாக ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, வனத்துறையின் உயர் அலுவலர்கள் உத்தரவின் பேரில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடல் நலம் குன்றிய காட்டு யானைக்கு குளுக்கோஸ் மற்றும் ஊசி மருந்துகள் மூலம் சிகிச்சையளித்தார். தொடர்ந்து காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காட்டு யானை எழுந்து நிற்பதற்கு ஏதுவாக சம்பவ இடத்தில் பொக்லைன் இயந்திரம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. வயது முதிர்வு காரணமாக காட்டு யானை உடல் நலம் குன்றிய நிலையில் படுத்தபடியாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

காட்டு யானைக்கு 2 ஆவது நாளாக தொடரும் சிகிச்சை


இதையும் படிங்க:யானை மீது ஐயப்பன் சுவாமி - கோலாகலமாக நடந்த திருவீதி உலா

ABOUT THE AUTHOR

...view details