ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கோயிலில் பண்ணாரி அம்மனை தரிசனம் செய்த அமைச்சர் சேகர் பாபு, இதைத்தொடர்ந்து கோயில் முன்பு புதியதாக ரூபாய் 12 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டுவது குறித்தான வரைபடத்தை பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் புதியதாக கோயில் வளாகத்தில் அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் அளித்த பேட்டியில், 'இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்தியமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு 12 கோடி ரூபாய் செலவில் 9 நிலை ராஜகோபுரம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டார். விரைவில் இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கும்.