ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள விராலிக்காட்டூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமி நவ.15ஆம் வழக்கம்போல் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் வீட்டில் யாரும் இல்லாத வேளையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி இரவு வீட்டிற்கு வந்த பிறகே பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் மாணவி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், மாணவியின் வீட்டிலிருந்து அவர் எழுதிய ஒரு உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த 3 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி, திடிரென்று தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்த மூன்று பேர் செய்த காரியம் என்ன? மாணவிக்கும் அவர்களுக்கும் என்னத் தொடர்பு என்பது குறித்த விசாரணையில் காவல்துறையினர் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
முதல்கட்ட தகவலில் அந்த மூவரும் மாணவியின் செல்போன் எண்ணுக்கு தொடர்ச்சியாக போன் செய்து தொந்தரவு கொடுத்துள்ளதாகவும், இதனை கண்டித்த மாணவியை எதையோ காரணம் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:15 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்.. 10 ஆண்டுகள் சிறையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!