ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 31 இடங்களில் ரூ. 24.93. கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டு உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் மாநகராட்சி பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில், பூங்காங்கள் அமைத்து பராமரிக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாநகராட்சியில் உள்ள 60 வட்டங்களிலும் எந்ததெந்த பகுதியில் காலியிடம் உள்ளன, அங்கு உள்ள மக்கள் தொகை ஆகிய விவரங்களைச் சேகரித்து, பூங்கா அமைக்க 31 இடங்கள் தேர்வு செய்யபட்டன.
பின்னர் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதியைப் பெற்று, பூங்கா அமைக்க ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.