தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாள் முடிவு? - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், நாளை மறுநாள் ஆலோசித்து முதலமைச்சர் முடிவு அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

reopen
reopen

By

Published : Nov 10, 2020, 12:13 PM IST

Updated : Nov 10, 2020, 12:28 PM IST

கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்துள்ள சிறுவலூர் மற்றும் வேட்டைகாரன்கோவில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ 16,300 பேர் நீட் பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறியுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாள் முடிவு?

பள்ளிச்சீருடைகள், காலணிகள் தயாராக உள்ளன. விரைவில் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 45% பெற்றோர் மட்டுமே பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்பு முகாமில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர். நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் “ என்றார்.

இதையும் படிங்க: நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்!

Last Updated : Nov 10, 2020, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details