தமிழ்நாடு

tamil nadu

ஈரோட்டில்  மதுபானங்கள் கடத்தலை தடுக்க 40 இடங்களில் சோதனைச்சாவடிகள்

By

Published : Mar 14, 2021, 10:48 PM IST

ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் மதுபானங்கள் கடத்தலை தடுக்க 40 இடங்களில் கூடுதல் சோதனைச்சாவடி அமைக்கப்படும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்தார்.

வேலூர் மாவட்டச்செய்திகள்  வேலூர்  பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதி  vellore  Vellore latest  40 இடங்களில் கூடுதல் சோதனைச்சாவடி
Checkpoints at 40 locations in Erode to curb Karnataka liquor smuggling

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடந்துவருகிறது. பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 374 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் காவல் துறை பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 374 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையாக தொலைத்தொடர்பு வசதிகள் செய்வதற்கு காவல் துறை தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்தல் சமயத்தில் கர்நாடக மதுபான கடத்தலை தடுப்பதற்கு தாளவாடி, கடம்பூர், பர்கூர்,அந்தியூர் உள்ளிட்ட 40 இடங்களில் கூடுதல் சோதனைச்சாவடி அமைக்கப்படும். குறிப்பாக பண்ணாரி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கூடுதலாக 4 இடங்களில் காவல்துறை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன" என்றார்.

இதையும் படிங்க:கர்நாடக குவாரி அதிபரிடம் ரூபாய் 4.66 லட்சம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details