ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான பச்சோந்திகள் வசிக்கின்றன. பச்சோந்திகள் அவ்வப்போது தன்னுடைய உடலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையவை.
தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நல்ல மழைபெய்து மரம், செடி, கொடிகள் பச்சைப் பசேலென காட்சி அளிக்கின்றன.
இந்நிலையில் நேற்று (ஜூலை 27) தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கஹள்ளி அருகே வனப்பகுதியிலுள்ள தார்ச் சாலையின் நடுவே ஒரு பச்சோந்தி மெதுவாக ஊர்ந்து சென்றது.