தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. அதில் பேசிய மாநில தலைவர் சின்னசாமி, "விவசாயிகளின் போராட்டங்களை முன்னெடுத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டை போலவும் இந்த ஆண்டும் வரும் ஜூலை 5ஆம் தேதி ஈரோட்டில் பேரணி நடத்தவுள்ளோம்.
'காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம்’ - எங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை! - தமிழக விவசாயிகள் சங்கம்
ஈரோடு: காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்தில் வட மாவட்டங்கள் பாதிக்காத வகையில், விவசாயிகளின் கருத்தை ஏற்று மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
பால் உற்பத்திக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில் எருமை பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு 50 ரூபாயும், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 40 ரூபாயும் வழங்கப்பட வேண்டும்.
காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் வரவேற்க கூடிய திட்டம் தான். இத்திட்டம் மூலம் அனைத்து மாவட்டங்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டு மத்திய அரசு செயல்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். இந்த செயற்குழு கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்றிருந்தனர்.