தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவிரி ஆற்றில் வெள்ளம்... 50 குடும்பங்கள் பாதிப்பு.. - Mettur Dam reached its full capacity of 120 feet

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கொடுமுடி அருகே உள்ள சத்திரபட்டியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

Etv Bharatகாவிரி ஆற்றில் வெள்ளம் - 50 குடும்பங்கள் பாதிப்பு
Etv Bharatகாவிரி ஆற்றில் வெள்ளம் - 50 குடும்பங்கள் பாதிப்பு

By

Published : Sep 1, 2022, 2:01 PM IST

ஈரோடு:காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கொடுமுடி அருகே உள்ள சத்திரபட்டியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், வாழை, கரும்பு, தென்னை பயிர்கள் நாசமாகியுள்ளன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றுக்கு திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை பி.பி .அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காவிரி கரை, கொடுமுடி போன்ற பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

இரண்டு முறை மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவிரி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி ஆற்றில் வெள்ளம் - 50 குடும்பங்கள் பாதிப்பு

குறிப்பாக கொடுமுடி அருகே உள்ள இழுப்பு தோப்பு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளன இதனால் அந்த பகுதிவாழ்த்துகள் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:உரிமையாளர் கண்முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்

ABOUT THE AUTHOR

...view details