ஈரோடு கருங்கல்பாளையம் கணபதிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி அருகே கடுமையான கருகும் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து சாலையில் சென்றவர்கள் அங்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் ஒன்று இருந்துள்ளது. உடனே அவர்கள் இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.