பொது ஊரடங்கு காரணமாக, கட்டடத்தொழில் முடங்கிப்போனது. இதனால் வறுமையில் வாடும் ஈரோடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, கரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
ஆனால், கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், தையல் கலைஞர்கள் போன்றோர், பல்வேறு நல வாரியங்களில் பதிவுசெய்தும் நிவாரணத்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
ஊரடங்கு காலத்தில் வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.