தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது - முதன்மை செயலாளர் பாலசந்திரன்! - breast cancer camp in erode

பெண்களிடையே அவர்களது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதாகவும், பிறருக்காகவே வாழும் பெண்கள் தங்களது ஆரோக்கியம் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம் என்று பெண் ஊழியர்களுக்கான மார்பக நோய் கண்டறியும் முகாமினைத் தொடங்கி வைத்த அரசின் முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

breast cancer camp in erode, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
breast cancer camp in erode

By

Published : Jan 23, 2020, 7:19 PM IST

ஈரோடு: பெண்கள் சுகாதாரம் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட நிர்வாகம், திருச்சி மார்பக புற்றுநோய் அறக்கட்டளை, தனியார் அமைப்பினர் இணைந்து அரசு பெண் ஊழியர்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற முகாமினை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளருமான பாலச்சந்திரன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

'தேவதையை கண்டேன்' பட பாணியில் மனித உரிமை ஆணையத்தில் புகார்!

இதனைத் தொடர்ந்து மார்பக புற்றுநோயை கண்டறியும் நடமாடும் வாகனத்தில் உள்ள வசதிகள் குறித்தும், நோய் கண்டறியும் முறை குறித்தும், முடிவுகள் வழங்கப்படும் முறை குறித்தும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். முகாமில் கலந்துகொண்ட மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் கண்டறிவது குறித்து அச்சமடையாமல், நோய் இருக்கிறதோ இல்லையோ தங்களது உடலைப் பரிசோதித்துக் கொள்வதில் தவறில்லை என்கிற எண்ணத்துடன் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முன்வர வேண்டும். பெண்களால் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனையை அனைத்துத் தரப்பு பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

7 பேரின் விடுதலைக்கு உதவ வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் ரவிச்சந்திரன் மனு

மேலும், முகாமினைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பாலச்சந்திரன், தமிழ்நாட்டில் பெண்களிடையே அவர்களது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வெகுவாக குறைந்து காணப்படுவதாகவும், பிறருக்காகவே வாழும் பெண்கள் தங்களது ஆரோக்கியம் குறித்தோ, சுகாதாரம் குறித்தோ கவலைப்படாமலிருப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details