தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாளவாடி அருகே நாட்டு வெடிகுண்டு கடித்து பசு பலி - bomb blast near Talawadi

தாளவாடி அருகே நாட்டு வெடிகுண்டு கடித்த பசு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாளவாடி அருகே நாட்டுவெடிகுண்டு வெடித்து பசு மாடு பலி
தாளவாடி அருகே நாட்டுவெடிகுண்டு வெடித்து பசு மாடு பலி

By

Published : Jan 14, 2022, 2:32 PM IST

தாளவாடி அடுத்த சேசன்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (41) விவசாயி. ஆடு, மாடுகள் பராமரித்துவந்தார். வனத்தையொட்டியுள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார்.

அங்கு உள்ள மானாவாரி நிலத்தில் மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசு கடித்துள்ளது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசுவின் வாய்ப் பகுதி முழுவதும் பலத்த காயமுற்று துடிதுடித்து கீழே விழுந்து உயிரிழந்தது.

தாளவாடி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு பலி

காட்டுப் பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடிவருவதாகவும் அதை மாடுகள் கடித்து உயிரிழப்பு ஏற்படுகிறது எனவும், நாட்டு வெடிகுண்டு வைக்கும் நபர்கள் மீது வனத் துறை, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாட்டு வெடி குண்டு தயாரிக்கும் நபர்களைக் கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது - ரஜினி பொங்கல் அட்வைஸ்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details