ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல். முருகன், "தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளித்ததை வரவேற்கிறோம். அதேபோல் மக்கள் கோரிக்கையான ராம நவமி, சிவராத்திரிக்கும் அரசு விடுமுறை அளிக்க கோரிக்கை வைப்போம்” என்றார்.
'ராம நவமி, சிவராத்திரிக்கும் அரசு விடுமுறை கேட்போம்' - எல். முருகன் - L.Murugan byte at sathiyamangalam
ஈரோடு: தைப்பூசத்தை போன்றே மக்கள் கோரிக்கையான ராம நவமி, சிவராத்திரிக்கும் அரசு விடுமுறை கேட்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி
தொடர்ந்து பேசிய அவர், "உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு கவனத்தில் எடுத்து பெட்ரோல் விலையை குறைக்கும். புதுச்சேரி ஆட்சி குழப்பத்திற்கு பாஜக காரணம் அல்ல. முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை" என்றார்.
இதையும் படிங்க:தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து தலைமை தான் முடிவு செய்யும் - எல். முருகன்