ஈரோட்டில் தெற்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் இன்று (செப்.13) நடைபெற்றது. அதற்கு பாஜக மாநில தலைவர் முருகன் தலைமை தாங்கினார். அதில் மாநில, மாவட்ட பாஜக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாணவ சமுதாயத்தை உலக அரங்கில் போட்டியிடும் வகையில் புதிய கல்விக் கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
'திமுக நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கொள்கை' - பாஜக - New Education Policy 2020
ஈரோடு: 'மும்மொழி பாடத்திட்டத்தை எதிர்க்கும் திமுக, அவர்கள் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது என பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக இருமொழிக் கல்விக் கொள்கை என்று பூச்சாண்டி காட்டி வருகிறது. மும்மொழிக்கல்வியை பயிற்றுவிக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடங்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். மும்மொழி பாடத்திட்டத்தை எதிர்க்கும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் நடத்தப்படுகிறது. இருமொழி பாடத்திட்டம் மட்டும் செயல்படும் எனும் கழகங்களுக்கு கண்டனம் தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க:நீட் தேர்வு மாணவர்கள் தற்கொலைக்கு திமுகதான் காரணம்: பாஜக மாநிலச் செயலாளர்