தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக தேர்தல் அறிக்கையில் திமுகவிற்கு பெரிய ஆப்பு - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு! - Election 2021

தேர்தல் களத்திற்கு வந்தவுடன் கூட்டத்தை பார்த்ததும், விவசாய கடன், கல்வி கடன், நகைக்கடன் தள்ளுபடி என திமுகவினர் அறிவிக்கின்றனர். எங்களது அறிவிப்பில் திமுகவிற்கு நாங்கள் பெரிய ஆப்பு அடிக்கப் போகிறோம் என அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

அமைச்சர்  செங்கோட்டையன் பேச்சு
அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

By

Published : Jan 26, 2021, 4:59 AM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளைத்தில் அதிமுக புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியபாமா காளியப்பன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். அனைத்துறைகளிலும் இந்தியாவிற்கு வழிகாட்டி மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை முதலமைச்சர் விரைவில் பெற்றுத்தருவார் என்றார்.

பின்னர் பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அரசை பார்த்து குறை சொல்பவர்கள் நேரடியாக சொல்லவேண்டும். இந்த அரசை பார்த்து ஆளு ஆளுக்கு கன்னா பின்னா வென்று பேசுகிறார்கள். அவர்கள் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அதிமுக என்ன செய்தது என்று கேட்கிறார்கள். திமுக தேர்தல் களத்தில் வந்தவுடன் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி என்று அறிவிக்கின்றார்கள். எங்களது அறிவிப்பை பாருங்கள் அவர்களுக்கு பெரிய ஆப்பு ஆடிக்க போகிறோம். நாங்கள் கொடுத்த பிறகு நீங்கள் எழுந்திருக்க முடியுமா என்று பாருங்கள். குற்றங்களை சொன்னால் நாங்கள் விழிப்போடு செயல்படுவோம். வருகின்ற தேர்தல், அதற்கு பிறகு வருகின்ற தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கமல் தான் ஒரிஜினல் அரசியல்வாதி' - சினேகன்

ABOUT THE AUTHOR

...view details