ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்திப்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். புத்தாண்டை முன்னிட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கனி அலங்காரத்தில் பண்ணாரி அம்மன்!
ஈரோடு: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பண்ணாரி அம்மனுக்கு கனிகள் படைத்து சிறப்புப் பூஜைக்கு பின் கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கரோனா பரவலைத் தடுக்க தடுப்புகள் கட்டப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குள், தகுந்த இடைவெளி விட்டு நின்று அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். பண்ணாரி அம்மனுக்கு கனிகள் படைத்து சிறப்புப் பூஜைக்கு பின் கனி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கோயிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டதோடு கோயிலின் தெற்கு பிரகார வாயில் முன்பு உப்பு, மிளகு தூவியும், நெய் தீபம் ஏற்றியும், வேலில் எலுமிச்சை கனி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையும் படிங்க: திருப்பூரில் இடி மின்னலுடன் கொட்டிய கனமழை!