தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பண்ணாரி அம்மன் கோயில் மூடல்: நுழைவுவாயில் முன்பு  பக்தர்கள் சாமி தரிசனம் - covid guidelines

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அரசு பல்வேறு கட்டுப்படுகளை விதித்துள்ள நிலையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஜனவரி 18 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

bannari amman temple
நுழைவாயில் முன்பு சாமி தரிசனம் செய்து திரும்பிய பக்தர்கள்

By

Published : Jan 17, 2022, 3:12 PM IST

ஈரோடு: அதிகரித்துவரும் கரோனா, ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோயில் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்கள் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களிலும் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொங்கல் பண்டிகை, தைப்பூசம் எனத் தொடர்ச்சியாகப் பண்டிகை நாள்கள் உள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு அதிக அளவில் வருகை தர வாய்ப்பு உள்ளதால் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) முதல் நாளை வரை (ஜனவரி 18) மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திப் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் மூடப்பட்டுள்ளது. இன்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்கு முன்பு பிரதான நுழைவு வாயில் அருகே கற்பூரம் பற்றவைத்தும் நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் உற்சவம்

ABOUT THE AUTHOR

...view details