தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடம்பூர் அருகே 108 அவசர ஊர்தியில் பிறந்த ஆண் குழந்தை! - ஈரோடு செய்திகள்

கடம்பூர் மலைப்பகுதி கிராமத்திலிருந்து கர்ப்பிணி ஒருவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவசர ஊர்தியிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அவசர ஊர்தியில் பிறந்த ஆண் குழந்தை
அவசர ஊர்தியில் பிறந்த ஆண் குழந்தை

By

Published : Jan 8, 2021, 7:09 PM IST

ஈரோடு:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதி குன்றி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்; விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி கர்ப்பமாக இருந்தார்.

இவர்கள் வசிக்கும் கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் இருக்கிறது. பரமேஸ்வரிக்கு இன்று இடுப்பு வலி ஏற்பட்டதால், கடம்பூரிலிருந்து 108 அவசர ஊர்தி மூலம் சத்தியமங்கலம் அழைத்துவரப்பட்டார்.

அப்போது அவருக்கு கடம்பூர் மலைப்பகுதியிலுள்ள மல்லியம் துர்க்கம் என்ற இடத்தில் வரும்போது வலி அதிகமாகியது. இதனால், விரைவு ஊர்தியை வழியில் நிறுத்திய மருத்துவ உதவியாளர்கள் சங்கர், வெள்ளியங்கிரி பரமேஸ்வரிக்கு விரைவு ஊர்தியிலேயே பிரசவம் பார்த்தனர். அவருக்கு நல்ல நிலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

பின்னர் அதே விரைவு ஊர்தியில், தாய், சேய் இருவரையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையும் படிங்க:கட்டுமான தொழிலாளர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details