ஈரோடு:கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையையொட்டி, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.4000 வரை விற்பனை செய்யப்படுவதால் பூ வியாபாரிகள், பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜன்நகர், புதுவடவள்ளி, தாண்டம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 25ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மல்லிகைப்பூக்களுக்கு, சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்பின் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், ஆவணி மாதம் முகூர்த்த சீசன் என்பதால் மல்லிகைப்பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.