ஈரோடு: கேரளா மாநிலம் திருச்சூர் கொங்கல்லூர் பரம்பில் ஹவுஸ் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சுனில்பாத். இவர், நேற்று முன்தினம் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று அவரது அறைக்கு பக்கத்தில் அறை எடுத்தவர், தவறுதலாக சுனில்பாத் அறைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு சுனில்பாத் மின் விசிறியில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையறிந்த லாட்ஜ் நிர்வாகத்தினர், ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து சென்ற போலீசார், இறந்து கிடந்த சுனில்பாத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
எந்த ஒரு முடிவிற்கும் தற்கொலை தீர்வல்ல இதில், அவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவதும், திருமணமாகி அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து சுனில்பாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுனில்பாத்தின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நிதியமைச்சர் வாகனத்தில் காலணி வீசிய வழக்கு...3 பெண்களுக்கு நீதிமன்ற காவல்