தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்திய பாதுகாப்புப் படையில் சேர திரண்டு வந்த இளைஞர்கள்! - 10 district yongers participate

ஈரோடு: இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்திய பாதுகாப்புப் படையின் ஆள் சேர்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.

இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் முகாம் ஈரோட்டில் இன்று தொடங்கியது!

By

Published : Aug 22, 2019, 4:09 PM IST

ஈரோடு வ.ஊ.சி விளையாட்டு மைதானத்தில் இன்று முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை 10 நாட்கள் இந்திய பாதுகாப்புப் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ஏற்கனவே இணையதளம் மூலம் விண்ணப்பித்த ஈரோடு, கோவை, மதுரை, சேலம், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி,தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாள் நடந்த முகாமில் சேலம்,தருமபுரி, கிருஷ்ணகிரியை சேர்ந்த சுமார் 2,600 இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் முகாம் ஈரோட்டில் இன்று தொடங்கியது!

இளைஞர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்ட பின்பு அவர்களுக்கு ஓட்டம், நீளம் தாண்டுதல், புல் அப்ஸ் எடுத்தல் உள்ளிட்ட உடல் தகுதி தேர்வுகள் நடைபெறுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கி விடிய விடிய சோல்ஜர், டெக்னிகல், கிளார்க், செவிலியர் உள்ளிட்ட பணிகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதற்காக நேற்று மதியம் முதலே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கூட்டம் கூட்டமாக வந்த இளைஞர்கள் பல மாதங்களாக பயிற்சி பெற்று ஆர்வத்துடன் வந்திருப்பதாக தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details