தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனைத்து சுங்கச் சாவடிகளிலும் போராட்டம் நடத்த அர்ஜுன் சம்பத் திட்டம்! - protest on toll plazas in tamilnadu

ஈரோடு: தமிழ்நாடு முழுவதும் ஐயப்ப பக்தர்களுக்கு சுங்கக் கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்று 16ஆம் தேதி அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

hindu party leader arjun sampath
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்

By

Published : Dec 6, 2019, 5:18 PM IST

அயோத்தில் ராமர் கோயில் கட்டும் பணிகளுக்கான ஐம்பொன்னாலான செங்கல், ஐம்பொன்னாலான ராமர் சிலைகள், பவானி கூடுதுறையில் சங்கமிக்கும் காவிரி, பவானி, அமுதநதியின் புனித தீர்த்தங்களை அயோத்திக்கு கொண்டுசெல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் பங்கேற்று ஆற்றிலிருந்து புனித நீரை கொண்டுவந்து ராமர் சிலைகளுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்தனர்.

ஐயப்பப் பக்தர்களுக்கான சிறப்பு தபால் நிலைய சேவை !

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத், அயோத்தியில்கூட ராமருக்கு என்று ஒரு நாடு கிடையாது என்றார். அது அயோத்தி நாடு என்று குறிப்பிட்ட அவர் தமிழ்நாட்டில்தான் ராமநாதபுரம் என்று ராமருக்கு ஒரு நாடு உள்ளது எனத் தெரிவித்தார். தமிழ்நாடு மகாபாரதம், ராமாயண பூமி என்றும் அவர் கூறினார்.

மேலும், அயோத்தில் ராமர் கோயில் கட்டும் கரசேவையை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆதரித்ததாகச் சுட்டிக்காட்டிய அர்ஜுன் சம்பத், திமுக எப்போதும் மக்களை நேரில் சந்தித்து உண்மையை கூறி மக்களிடம் வாக்குகளை வாங்காது என்றும் கொள்ளைப்புறமாக ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் கொண்டது எனவும் சாடினார்.

'சபரிமலைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது' - திருப்தி தேசாய்

மேலும் சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்பில் அரசியல் சாசன அமர்வின் ஐந்து நீதிபதிகள் கொண்ட தீர்ப்பு இறுதியானது அல்ல என்று கூறியிருந்த நிலையில், இந்தத் தீர்ப்பு இறுதியானது என்று நினைத்து ஐயப்பன் மீது நம்பிக்கை இல்லாத பெண்களை சபரிமலைக்கு அனுப்புவது ஐயப்ப பக்தர்களுக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து சுங்கச் சாவடிகளிலும் போராட்டம் நடத்த அர்ஜுன் சம்பத் திட்டம்

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு புனித யாத்திரைகளுக்கு சலுகைகள் அளிப்பதுபோல் ஐயப்ப பக்தர்களுக்கு சலுகை அளிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மாநிலம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் ஐயப்ப பக்தர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி 16ஆம் தேதி அனைத்து சுங்கச்சாவடியின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details