தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக நிர்வாகி விடுத்த மிரட்டல் - விசைத்தறி உரிமையாளர் தற்கொலை முயற்சி! - அதிமுக நிர்வாகி விடுத்த மிரட்டல்

ஈரோடு: அதிமுகவின் நிர்வாகி கிருஷ்ணராஜ் விடுத்த மிரட்டலால் விசைத்தறி உரிமையாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

admk member assaulted public  admk assaulted man suicide attempt  அதிமுக நிர்வாகி விடுத்த மிரட்டல்  விசைத்தறி உரிமையாளார் தற்கொலை முயற்சி
விசைத்தறி உரிமையாளார் தற்கொலை முயற்சி

By

Published : Nov 26, 2019, 7:41 AM IST

ஈரோடு மாவட்டம் பவானி ராணா நகரைச் சேர்ந்தவர் தேவராஜன். விசைத்தறி உரிமையாளரான இவருக்கும் சுகுணா என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த தேவராஜன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நேரத்தில் சுகுணாவுக்கு ஆதரவாக பவானி அதிமுக நகரச் செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கிருஷ்ணராஜ் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

நிர்பயா வழக்கு வேறொரு நீதிபதிக்கு மாற்றம்!

மேலும் கிருஷ்ணராஜ் விடுத்த மிரட்டல் காரணமாக மனமுடைந்த தேவராஜ் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்போது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிமுக நிர்வாகி விடுத்த மிரட்டல்! விசைத்தறி உரிமையாளர் தற்கொலை முயற்சி

இதனிடையே சம்பவம் நிகழ்ந்து 24 மணி நேரத்தைக் கடந்தும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல், காலம் தாழ்த்தி வருவதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details