ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் முல்லை சக்தி என்பவருக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பவானி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்துள்ளனர். அவர்களில் சுஜின், ரமேஷ் ஆகிய இருவரும் நேற்றிரவு சீட்டு விளையாடினர். அப்போது இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.