தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்

ஈரோடு: சத்தியமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் கருவுற்றதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

protest
protest

By

Published : Dec 29, 2020, 9:34 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் மேட்டூரை சேர்ந்தவர்கள் மகேந்திரன் - வைஜெயந்தி தம்பதி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இருவரும் கூலித் தொழில் செய்துவரும் நிலையில், பொருளாதார பின்னடைவு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதற்கான சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.

குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்

அதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு கருவுற்ற பெண்ணுக்கு ஏற்படும் வாந்தி சோர்வு ஏற்பட்டதால் அதே அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் முறையிட்டனர். மருத்துவப் பரிசோதனை செய்ததில், சிக்கன் சாப்பிட்டதால் இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் சத்து மாத்திரை கொடுத்தால் சரியாகி விடும் என கூறி மாத்திரைகள் வழங்கினர்.

ஆனால், உடலில் கரு வளர்ந்து கொண்டே இருப்பதை உணர்ந்த பெண் இன்று(டிச.29) தனியார் நிறுவனத்தில் ஸ்கேன் செய்து பார்த்த போது, கருவுற்றிருப்பது தெரியவந்தது. 10 மாதங்களுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகு மீண்டும் கருவுற்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து உக்கரம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மைக்கேல் கூறுகையில், அறுவை சிகிச்சையில் இது போன்ற தவறுகள் நடப்பது அரிதான ஒன்று. இதுகுறித்து புகார் மனு அனுப்பி அதற்குரிய இழப்பீடு தொகை 30,000 ரூபாய் பெற முடியும் என்றார்.

கருவுற்ற பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அறுவை சிகிச்சையின் போது நடந்த தவறு குறித்து ஈரோடு மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மீது புகார் கொடுக்க காவல்துறையின்ர் அறிவுறுத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: கேஸ் ஊழியர் எனக் கூறி பண மோசடி: பெண் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details