ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும்போது, தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் நடமாடுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், நேற்று (ஆக. 30) மதியம் சத்தியமங்கலத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இரு வாலிபர்கள் தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். தமிழ்நடு - கர்நாடக எல்லையில் புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாடிக் கொண்டிருந்தது.
இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை துரத்திய காட்டு யாணை யானையைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் யானையின் அருகே சென்றபோது திடீரென காட்டு யானை இருசக்கர வாகனத்தை துரத்த தொடங்கியதால், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது காட்டு யானை ஓரிடத்தில் நின்றதால் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு இருவரும் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினர்.
சிறிது நேரம் அப்பகுதியில் உலவிய காட்டு யானை மீண்டும் இரு இளைஞர்களையும் துரத்த முற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள் யானையை சத்தம் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க:ஏழு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு... வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது