ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த மாரனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி சரண்யா கணவனை பிரிந்து தன் மகன் நகுலுடன் பூசாரிபாளையத்தில் வசித்து வருகிறார். நகுல் செண்பகபுதூர் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை மாலை மாயமாகியுள்ளார். சிறுவன் நகுலை உறவினர் தேடியும் கிடைக்காததால் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.