ஈரோடு: தமிழ்நாடு, கர்நாடகம் மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த மலைப்பாதையில் சிவகாசியிலிருந்து பட்டாசு பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி கர்நாடக மாநிலம் மைசூர் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது.
திம்பம் மலைப்பாதையில் லாரி மீது மோதிய சரக்கு வாகனம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் பட்டாசு பாரம் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இரண்டு வாகனங்களும் கவிழ்ந்தன.
அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து கிரானைட் கற்கள் பாரம் ஏற்றி வந்த சிறிய சரக்கு வாகனம் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்தது. சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு வனப்பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கணவனின் இறுதி ஊர்வலத்தில் 2 மனைவிகள் உறவினர்களுக்கிடையே மோதல்