தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மனைவியுடன் பழகிவந்த இளைஞருக்கு கத்திக்குத்து: கணவன் கைது - திருமணத்தை மீறிய உறவு

ஈரோடு சத்தியமங்கலம் அருகே தனது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரைக் கத்தியால் கழுத்தில் குத்திய நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மனைவியுடன் பழகி வந்த இளைஞருக்கு கத்தி குத்து
மனைவியுடன் பழகி வந்த இளைஞருக்கு கத்தி குத்து

By

Published : Oct 18, 2021, 11:15 AM IST

ஈரோடு:சத்தியமங்கலம் அருகேவுள்ள அக்கரை தத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சிவராஜ். இவரது மனைவி தனலட்சுமி. தனலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருக்கும் மண உறவைத் தாண்டிய காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்த நிலையில் இது குறித்து அறிந்த சிவராஜ், ராஜேஷை கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து தங்களது உறவை தொடர்ந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சிவராஜ் நேற்று (அக்.17) அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ராஜேஷை தடுத்து நிறுத்தி, கத்தியால் கழுத்தில் குத்தினார்.

சிறையில் அடைப்பு

இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜேஷை கண்ட அருகிலிருந்தவர்கள் இது குறித்து பவானிசாகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் சிவராஜை கைதுசெய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்திச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:திருப்பத்தூர் அருகே மனைவியை பெட்ரோல் ஊற்றி கொன்றவர் கைது

ABOUT THE AUTHOR

...view details