தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி - சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல்

பவானிசாகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானிசாகரில் நின்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்
தீப்பிடித்து எரிந்த லாரி

By

Published : Dec 31, 2021, 12:53 PM IST

ஈரோடு: பவானிசாகரை சேர்ந்தவர் ஓட்டுநர் சரவணக்குமார். இவர் அட்டை கோன் பாரம் ஏற்றிய லாரியை தனது வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை லாரி திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீப்பிடித்து எரிந்த லாரி

பொருள்கள் சேதம்

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். லாரியில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான அட்டை முழுவதும் எரிந்து சேதமானது.

இது குறித்து லாரி உரிமையாளர் யுவராஜ் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயிலில் சிலை திருடியவர் கைது

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details