தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தலமலை சாலையில் சிறுத்தை நடமாட்டம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! - தலமலை

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாகச் செல்லுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சிறுத்தை
சிறுத்தை

By

Published : Dec 3, 2020, 9:27 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை வனப்பகுதி சிறுத்தை, புலிகளின் புகலிடமாக உள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான தலமலை சாலையின் இருபுறமும் புற்கள் நிறைந்து பச்சை பசேலென காணப்படுவதால் புள்ளிமான்கள் அதிகளவில் உலாவுகின்றன.

புள்ளிமான்கள் தீவனம், குட்டையில் தண்ணீர் தேடிவரும்போது சிறுத்தை வேட்டையாடுவதால் ஆங்காங்கே சிறுத்தை நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து தலமலை வழியாக தாளவாடிக்கு சில இளைஞர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பெஜலட்டி என்ற இடத்தில் சாலையோரம் சிறுத்தை அமர்ந்திருப்பதை இளைஞர்கள் பார்த்தனர்.

அப்போது காரைப் பார்த்த சிறுத்தை சாலையைக் கடந்து காட்டுக்குள் சென்றது. இதனை இளைஞர்கள் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

தலமலை சாலையில் சிறுத்தை நடமாட்டம்

இந்தக் காணொலி சத்தியமங்கலம் பகுதியில் வைரலாகிவருகிறது. சிறுத்தை நடமாட்டத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலமலை வனத் துறையினர் இருசக்கர வாகன ஓட்டிகள் பற்றிய விவரங்கள் திம்பம் சோதனைச்சாவடியில் பதிவுசெய்யப்பட்ட பிறகே தலமலைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வாகனத்தை விட்டு இறங்க வேண்டாம் எனவும் வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: புரெவி புயல்: பாம்பனில் 60 கி.மீ. வேகத்தில் வீசும் சூறைக்காற்றால் பொதுமக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details