ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திகினாரை பகுதியைச் சேர்ந்த ரங்சாமி என்பவரின் மகள் சுதா (20). இவர் மைசூரில் தங்கி சட்டம் பயின்று வந்தார். இந்நிலையில், ரங்கசாமி, தனது மனைவி மதேவம்மா, மகள் சுதா ஆகியோருடன் விவசாயத் தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கரளவாடி என்ற இடத்தில் வேகமாக வந்த இருசக்கர வாகனம், சுதா மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த சுதா, சாம்ராஜநகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.