தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோடு மல்லியம்தூர்க்கத்தில் ஆர்ப்பரித்த காட்டாற்று வெள்ளம்! - latest erode district news tamil

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் மல்லியம்தூர்க்கம் கோயில் அருகே வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மல்லியம்தூர்க்கம் கோயில்

By

Published : Oct 12, 2019, 9:47 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் காலை பெய்த கனமழையால் பல்வேறு புதிய அருவிகள் உருவாகி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்பகுதியில் உள்ள மல்லியம்தூர்க்கம் கோயில் அருகேயுள்ள சுனையில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

கடம்பூர் மலைப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

'மாமரத்துப்பள்ளம்' என்ற இடத்தில் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளத்தில் மரக்கிளைகள், செடி மற்றும் கொடிகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பள்ளத்தின் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளநீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தை இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற சிவக்குமார் என்பவர், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அப்போது அங்கிருந்த சிலர் சிவக்குமாரை மீட்டனர். இருப்பினும் அவருடைய இருசக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆங்காங்கே சாலையில் வெள்ளநீர் பாய்ந்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதையும் படியுங்க:

ஆற்றின் நடுவே நடந்த விருந்து - 50க்கும் மேற்பட்டோரை சுற்றி வளைத்த வெள்ளம்!

ABOUT THE AUTHOR

...view details