தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 15, 2020, 10:23 PM IST

ETV Bharat / city

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடுக்கு முதலமைச்சர் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெற முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளுவார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

minister-senkottayan
minister-senkottayan

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாவக்கட்டுபாளையம் பகுதியில் பணியாற்றி வரும் 500க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெற அடையாள அட்டைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவது குறித்து முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார்.

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு குறித்து இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. கனிணி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும், சிறப்பாசிரியர்களுக்கும் வழக்கு முடிந்து கலந்தாய்வுகள் நடத்தப்படும். 40 வயதுக்கும் மேல் உள்ள உயர்வகுப்பு ஆசிரியர்களுக்கு பணிவாய்ப்பு இல்லை மற்றவர்களுக்கு 45 வயது வரை பணிவாய்ப்பு வழங்கப்படும்.

பள்ளிகளுக்குத் தேவையான புத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாடத் திட்டங்கள் குறைப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 60 சதவிகித பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க :லாக்டவுன் தளர்வுக்குப்பின் சூடுபிடிக்கும் கட்டுமான தொழில்

ABOUT THE AUTHOR

...view details