ஈரோடு மாவட்டத்தில் நேற்று(ஏப்ரல்.01) பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டி பாளையம் பகுதியில் உள்ள கடுகாம்பாளையம், நாதிபாளையம், பொலவக்காளிபாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று வீசியதால் அங்கு சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன.
பலத்த சூறைக்காற்று: அறுவடைக்கு தயாராக இருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் செவ்வாழைகள் நாசம் - hurricane
ஈரோட்டில் நேற்று(மே.01) பலத்த சூறைக்காற்று பெய்த பலத்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் செவ்வாழைகள் சாய்ந்து விழுந்து நாசமாகின.
ரூ.20 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் செவ்வாழைகள் நாசம்
ஒரு வாழை நடவு செய்ய 200 ரூபாய் வரை செலவு செய்து, தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் சாய்ந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மேலும் சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அலுவலர்கள் கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு